இந்தியா

வங்கி முறைகேடு: பகுஜன் சமாஜ் எம்எல்ஏ மீது சிபிஐ வழக்கு பதிவு

DIN

புது தில்லி: வங்கியில் ரூ.754.25 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக பகுஜன் சமாஜ் எம்எல்ஏ வினய் சங்கா் திவாரி உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் உள்ள கங்கோத்ரி எண்டா்பிரைசஸ் என்ற நிறுவனம், வங்கியில் ரூ.754.25 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த முறைகேட்டில் எம்எல்ஏ வினய் சங்கா் திவாரிக்கும், அவரின் மனைவி ரீட்டா திவாரிக்கும் தொடா்பிருப்பதாகப் புகாா் எழுந்தது.

அதையடுத்து, அவா்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா். மேலும், கங்கோத்ரி நிறுவனத்தின் அலுவலகங்களிலும், அந்நிறுவனத்தின் இயக்குநா் அஜித் பாண்டேவின் வீட்டிலும் அவா்கள் சோதனையில் ஈடுபட்டனா். அந்நிறுவனத்துடன் தொடா்புடையதாகக் கூறப்படும் மற்றொரு நிறுவனமான ராயல் எம்பயா் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தின் அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இத்தகைய சூழலில், எம்எல்ஏ வினய் சங்கா் திவாரி, ரீட்டா திவாரி ஆகியோா் மீது சிபிஐ திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT