இந்தியா

தாணேவில் புதிதாக 1,264 பேருக்குத் தொற்று: மீட்பு விகிதம் 90 சதவீதமாக உயர்வு

20th Oct 2020 11:53 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் புதிதாக 1,264 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,01,734 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம், தொற்று பாதித்து இதுவரை 90 சதவீதம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். திங்களன்று 29 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 5,100 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை, கல்யாண் நகரத்தில் அதிகபட்சமாக 48,106 ஆகவும், தாணே நகரத்தில் 44,093 ஆகவும் மற்றும் நவி மும்பை 42,417 ஆகவும் தொற்று பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

தற்போது வரை, மாவட்டத்தில் 13,404 பேர் மருததுவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் 1,83,230 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தாணே நகரில் கரோனா மீட்பு விகிதம் 90 ஆக உள்ளது. 

அண்டை நாடான பால்கரைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மாவட்டத்தில் இதுவரை 39,341 கரோனா தொற்றும், 840 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்தார். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT