இந்தியா

ஹாத்ரஸ் சம்பவம்: கைது செய்யப்பட்ட நால்வரிடம் சிபிஐ விசாரணை

20th Oct 2020 05:34 AM

ADVERTISEMENT


புது தில்லி: உத்தர பிரதேசம் மாநிலம் ஹாத்ரஸில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வரிடம் சிபிஐ திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. 

இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், "பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு அலிகர் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சந்தீப், லவகுஷ், ரவி, ராமு ஆகிய நால்வரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று இந்த விசாரணை நடத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்டிருந்த ஜவாஹர்லால் நேரு மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது' என்று தெரிவித்தனர். 

ஹாத்ரஸில் செப்டம்பர் 14-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 19 வயது தலித் பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் செப்டம்பர் 29-ஆம் தேதி அவர் உடல்நிலையில் முன்னேற்றமின்றி உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்காமல் போலீஸார் தகனம் செய்தனர். 

இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியதையடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT