இந்தியா

கேரளம்: கள்ளச்சாரயம் அருந்திய 5 பேர் பலி

20th Oct 2020 05:32 AM

ADVERTISEMENT


பாலக்காடு: கேரள மாநிலத்தில் பாலக்காடு கஞ்சிக்கோடு அருகே போலி மது அருந்திய 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கஞ்சிக்கோடு மலைவாழ் மக்கள் காலனியில் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திய 2 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. உயிரிழந்த இருவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்நிலையில், திங்கள்கிழமை காலை சிவம் (37) என்பவரும் தனது வீட்டு வாசலில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இவரும் அந்த இருவருடன் சேர்ந்து மது அருந்தியது விசாரணையில் தெரியவந்தது. 

இந்நிலையில், அதே பகுதியில் மேலும் 9 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் திங்கள்கிழமை மேலும் இருவர் உயிரிழந்தனர். தற்போது 3 பேர் பெண்கள் உள்பட 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெள்ளை நிறத்தில் ஒரு திரவத்தை தாங்கள் முந்தைய இரவு குடித்ததாகவும், அந்த திரவத்தில் பினாயில் போன்ற வாடை இருந்ததாகவும் சிலர் கூறினர். அதனை அவர்கள் எங்கு வாங்கினார்கள், மேலும் யாரெல்லாம் இதுபோன்ற மதுவை வாங்கி வைத்துள்ளனர் என்று விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT