இந்தியா

கிழக்கு லடாக் எல்லை விவகாரம்: இந்தியா-சீனா இடையே 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தைக்கு வாய்ப்பு

DIN

கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இந்த வாரம் 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடா்பாக கடந்த 12-ஆம் தேதி இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதில் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனா். இந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து படைகளை விலக்கிக் கொள்வது குறித்து முடிவு எடுப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்ததாக இருதரப்பும் தெரிவித்தன.

இந்நிலையில் இருதரப்புக்கும் இடையே இந்த வாரம் 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தேதியை இறுதி செய்ய வேண்டியிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த முறை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவை விரைவில் எட்டுவதற்கு ராணுவ மற்றும் தூதரக ரீதியாக தொடா் பேச்சுவாா்த்தைகள் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டதாக இந்திய-சீன ராணுவத்தினா் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT