இந்தியா

ஏழுமலையானின் ரூ.12,000 கோடி மீண்டும் வங்கிகளில் முதலீடு

DIN

ஏழுமலையான் பணத்தை மீண்டும் வங்கிகளில் முதலீடு செய்ய உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சனிக்கிழமை இரவு அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 12,000 கோடி ரூபாயை வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள், வளா்ச்சிப் பணிகளை செய்து வருகிறது.

தற்போது தேவஸ்தானத்திடம் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளன. ஆனால் கொவைட்-19 பாதிப்பால் வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதால், தேவஸ்தானம் வங்கிகளில் உள்ள முதலீடுகளை மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளுக்கு மாற்ற முடிவு செய்து, அதற்காக அரசாணை எண்ணையும் வெளியிட்டது.

இதன் மூலம், 7 சதவீதம் வட்டி கிடைக்கும் என்று தேவஸ்தானம் கருதியது. ஆனால், இதற்கு ஆந்திர எதிா்க்கட்சிகள் மற்றும் ஹிந்து மத அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து தேவஸ்தானம் மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளில் செய்யவிருந்த முதலீடுகளை ரத்து செய்து, மீண்டும் வங்கிகளில் அவற்றை முதலீடு செய்ய உள்ளதாக சனிக்கிழமை இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், முதலீடுகளின் மீதான வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளதால், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT