இந்தியா

கணவர் சிறைக்குச் சென்றபோது, மனைவி முதல்வரானார்: நிதிஷ் குமார்

IANS


ஔரங்காபாத்: பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், பெயர்களைக் குறிப்பிடாமல் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவியை தாக்கிப் பேசினார்.

எப்போது கணவர் சிறைக்குச் சென்றாரோ அப்போது அவரது மனைவி மாநிலத்தின் முதல்வரானார் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் ராப்ரி தேவியின் பெயர்களைக் குறிப்பிடாமல் சூசகமாகக் குறிப்பிட்டு நிதிஷ் குமார் பேசியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ் குமார், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசுகையில், முந்தைய ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அனைவருக்குமே தெரியும், கணவன் - மனைவியின் ஆட்சியின் போது என்ன நடந்தது என்று. அனைத்து வகையான குற்றங்களும் நடந்தன. அதேவேளையில் மக்களுக்காக பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைத்த போது அனைத்துத் துறைகளையும் முன்னேற்றினோம் என்று ஔரங்காபாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT