இந்தியா

உ.பி., பஞ்சாப், சிக்கிமில் இன்று பள்ளிகள் திறப்பு

ANI


கரோனா பேரிடர் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், சிக்கிமில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், பாடங்களில் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறும் வகையில் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வருமாறு மாணவர்கள் வற்புறுத்த மாட்டார்கள் என்றும், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசுகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நாளான இன்று குறைந்த அளவிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT