இந்தியா

ஜேடியு-க்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பிகார் எதிர்காலத்தை நாசமாக்கும்: சிராக் பாஸ்வான்

19th Oct 2020 06:33 PM

ADVERTISEMENT


ஐக்கிய ஜனதா தளத்துக்கு (ஜேடியு) விழும் ஒவ்வொரு வாக்கும் பிகாரின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை நாசமாக்கும் என லோக் ஜனசக்தி கட்சித் (எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வான் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை விமரிசித்து சிராக் பாஸ்வான் மேலும் தெரிவித்ததாவது:

"நிதிஷ் குமாரின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியைப் பார்த்தாலே அடுத்த 5 ஆண்டுகளை நம்மால் நினைத்துப் பார்க்க முடியும். இப்படிப்பட்ட உதவியற்ற நிலையிலிருந்து மாநிலத்தை மீட்டெடுக்க நாம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்."

243 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 என 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

ADVERTISEMENT

இந்தத் தேர்தலில் ஜேடியு-க்கு எதிராக எல்ஜேபி போட்டியிடுகிறது. ஆனால், ஜேடியுவின் கூட்டணி கட்சியான பாஜக போட்டியிடும் தொகுதிகளில் எல்ஜேபி போட்டியிடவில்லை.

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT