இந்தியா

ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை விசாரணை

19th Oct 2020 04:05 PM

ADVERTISEMENT


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை இன்று விசாரணை நடத்தியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது, அந்த மாநிலத்தின் கிரிக்கெட் அமைப்பின் நிதியை ஃபரூக் அப்துல்லா முறைகேடாக பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்தபோது, 2002 - 2011 வரை பிசிசிஐ வழங்கிய நிதியிலிருந்து ரூ.43 கோடியை ஃபரூக் அப்துல்லா முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் ஃபரூக் அப்துல்லாவிடம் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT