இந்தியா

ஜார்க்கண்டில் மீட்பு விகிதம் 92 சதவீதமாக உயர்வு: ஹேமந்த் சோரன் 

19th Oct 2020 01:09 PM

ADVERTISEMENT

 

ஜார்க்கண்டில் கரோனா மீட்பு விகிதம் 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும் என்று அந்த நாட்டு முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஏழு பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இறப்பு விகிதம் 0.87 ஆக உள்ளது. 

கரோனா சோதனைகளைப் பொறுத்தவரை நாட்டின் எட்டு முன்னணி மாநிலங்களில் ஜார்கண்ட் மாநிலமும் ஒன்றாக உள்ளது. இதற்கு ஜார்க்கண்ட் மக்களின் முழு ஒத்துழைப்பே காரணம் என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT

மாநில மக்களைப் பாதுகாக்க அரசு சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் தந்த ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் பாதிப்பு குறைந்துவிடவில்லை, மக்கள் பாதுகாப்புடனும் இருங்கள். பண்டிகை காலங்களில் முகக்கவசம் அணிய மறக்காதீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

தற்போது 6,502 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 89,011 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 2,84,8,662 சோதனைகளைச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT