இந்தியா

மகிழ்ச்சியான செய்தி: ஹரியாணாவில் 4 மாதங்களில் பலியில்லாத முதல் நாள்

19th Oct 2020 01:23 PM

ADVERTISEMENT

சண்டீகர்: கரோனா பேரிடருக்கு இடையே, மகிழ்ச்சிதரும் வகையில் ஹரியாணா மாநிலத்தில் கடந்த நான்கரை மாதங்களில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை கரோனாவுக்கு ஒருவரும் பலியாகாத நாளாக மாறியுள்ளது.

அதேவேளையில், கவலைதரும் வகையில் ஹரியாணாவில் கரோனா பாதிப்பு 952 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து மாநிலத்தின் சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மாநிலத்தில் கரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,640 ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று கரோனாவுக்கு ஒரு நோயாளியும் பலியாகவில்லை என்ற தகவலை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக மாநில சுகாதாரத் துறை கூடுதல் முதன்மைச் செயலர் அரோரா கூறியுள்ளார்.

மாநிலத்தில் கடந்த 135 நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக கரோனாவுக்கு ஒருவரும் பலியாகவில்லை.

ADVERTISEMENT

கடைசியாக கடந்த ஜூன் 6-ம் தேதிதான் கரோனாவுக்கு ஒருவரும் பலியாகவில்லை என்று பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு சுமார் நான்கரை மாதங்களுக்குப் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோனாவுக்கு ஒருவரும் பலியாகவில்லை. 

மார்ச் 17-ம் தேதி மாநிலத்தில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதத்தில் நாள்தோறும் சராசரியாக 20 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இதுவரை மாநிலத்தில் 1,50,033 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 952 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,042 ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 42 நாள்களாக உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT