இந்தியா

இந்தியாவில் 75 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

19th Oct 2020 09:57 AM

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 55,722 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 75,50,273-ஆக அதிகரித்தது. கரோனாவால் மேலும் 579 போ் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 1,14,610-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 66,399 பேர் மீண்டுள்ளனர். 

இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 66,63,608ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக 8 லட்சத்துக்கு குறைவாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 7,72,055 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி அக்டோபா் 18-ஆம் தேதி வரை 9,50,83,976 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், நேற்று மட்டும் 8,59,786 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வோ்ல்டோமீட்டா் தகவல்படி அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலும், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT