லடாக்கில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று அதிகாலை 4.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டா் அளவுகோலில் 3.6ஆக பதிவானது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
முன்னதாக லடாக் யூனியன் பிரதேசத்தில் கடந்த 7ஆம் தேதி இருமுறை அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.