இந்தியா

'பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்'

18th Oct 2020 01:11 PM

ADVERTISEMENT

பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் பிகார் மாநில தேர்தல் பொறுப்பாளருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

பிகாரில் வரும் 28-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதில் ராஷ்டிரிய ஜனதா தள மெகாக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகின்றன. 

இதனிடையே பிகார் தேர்தல் குறித்து பேசிய பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ், மக்களிடையே அதிக அளவிலான உற்சாகத்தைக் காணமுடிவதாகக் கூறினார். பிகாரில் எங்கு சென்றாலும் பிரதமர் மோடியின் பெயர் பேசப்படுகிறது. நாடும் நாட்டு மக்களும் பிரதமர் மோடியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இது பாஜகவிற்கு மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சிகளுக்கும் பலனளிக்கும் என்று கூறினார்.

ADVERTISEMENT

Tags : Bihar election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT