இந்தியா

'நீட் தேர்வில் மாணவர்களின் சாதனை வரும் தலைமுறைக்கு உத்வேகமாக அமைந்துள்ளது'

18th Oct 2020 08:56 PM

ADVERTISEMENT

நீட் தேர்வில் மாணவர்களின் சாதனை வரும் தலைமுறைக்கு உத்வேகமாக அமைந்துள்ளது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக்கடிதத்தில், தெலங்கானா மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் மலைவாழ் மாணவர்கள் என சுமார் 190 மாணவர்கள் அரசு மற்றும் இலவச பயிற்சி மையங்கள் மூலம் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலனோர் சாலையோர வியாபாரிகள், விவசாய கூலிகள், அன்றாட வேலை செய்யும் ஏழைத்தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய அளவில்  நீட் தேர்வில் பட்டியலின பிரிவில் 85வது இடத்தை பிடித்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷா என்ற மாணவி அகில இந்திய மருத்துவக்கல்லூரியில் இருதயவியல் நிபுணராக படிக்க உள்ளேன் என்ற தன் ஆசையை வெளிப்படுத்தினார். இதைப்போல் அகில இந்திய அளவில் பட்டியலின பிரிவில் 168வது இடம் பிடித்த அபிலாஷ் என்ற மாணவர் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையிலும் நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.

சாதிப்பதற்கு வறுமை ஒரு தடையில்லை என்பதை மாணவர்கள்  நீட் தேர்விலும் சாதனை படைத்து நிருபித்துள்ளார்கள். ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவ படிப்பு இன்று நீட் தேர்வால் ஏழைகளுக்கு எட்டும் கனியாக மாறியுள்ளது. மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்திருப்பது வருங்கால தலைமுறைக்கு உத்வேகமாக அமைத்திருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Tags : Tamilisai Soundarajan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT