இந்தியா

நியூசிலாந்து பிரதமருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

18th Oct 2020 04:13 PM

ADVERTISEMENT

பொது தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "மகத்தான வெற்றி பெற்றதற்காக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு, எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.  ஓராண்டுக்கு முன் நடந்த நமது சந்திப்பை நினைத்து பார்க்கிறேன். இந்தியா-நியூசிலாந்து இடையேயான உறவை, மேலும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இணைந்து பணியாற்றுவதை  எதிர்நோக்கியுள்ளேன்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து பொதுத் தோ்தலில் லிபரல் லேபா் கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆா்டா்ன் 2-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT