இந்தியா

கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் 2020: மோடி காணொலி மூலம் உரை

18th Oct 2020 03:13 PM

ADVERTISEMENT

'உலகத்துக்காக இந்தியா' என்னும் சிந்தனையுடன் சர்வதேச சுகாதார பிரச்னைகள் குறித்து அக்டோபர் 19 முதல் 21 வரை நடைபெறவுள்ள கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் 2020-இல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

சுகாதாரம் மற்றும் வளர்ச்சியில் இருக்கும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச கூட்டுறவை கடந்த 15 ஆண்டுகளில் கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் வளர்த்துள்ளது.

கொள்கைகளை வகுப்பவர்கள் மற்றும் அறிவியல் துறையின் தலைவர்களை ஒன்று திரட்டி அக்டோபர் 19 முதல் 21 வரை கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் மெய்நிகர் முறையில் நடக்கவிருக்கிறது.

'உலகத்துக்காக இந்தியா' என்னும் சிந்தனையுடன் சர்வதேச சுகாதார பிரச்னைகள் குறிப்பாக கொவிட்-19 மீது சிறப்பு கவனம் செலுத்தி ஆழமான அறிவியல் கூட்டணிகளை இந்த கூட்டம் வலியுறுத்தும். உலகத் தலைவர்கள், புகழ் பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கும், கரோனா நோய்த்தொற்று பரவல் சவால்களை எதிர்கொள்வதற்கும் தேவைப்படும் முக்கிய முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பார்கள்.

ADVERTISEMENT

நாற்பது நாடுகளில் இருந்து சுமார் 1600 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன், உயிரி தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு மற்றும் நிதி ஆயோக் ஆகியவை, கிராண்ட் சேலஞ்சஸ் கனடா, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை மற்றும் வெல்கம் ஆகியவற்றோடு இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இந்த கூட்டத்தில் தொடக்க உரையாற்றுகிறார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் உபதலைவர் பில் கேட்ஸ் உரையாற்றுகிறார்.

இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் வில்லன் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து கிராண்ட் சேலஞ்சர்ஸ் இந்தியாவை 2012-இல் தொடங்கின. வெல்கமும் இதில் இணைந்துகொண்டது.

சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, தாய் சேய் நலம், தொற்று நோய்கள் உள்ளிட்ட துறைகளில் கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா பணியாற்றுகிறது.

Tags : modi Grand Challenges Annual Meeting 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT