இந்தியா

தில்லியில் 6 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

18th Oct 2020 07:44 PM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் மொத்தம் 49,414 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 14,506 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 34,908 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இன்று மேலும் 3,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,31,017-ஆக உயா்ந்துள்ளது. 

நோய்த் தொற்றால் இன்று 28 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 6,009-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து இன்று 2,863 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 3,01,716-ஆக அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி 23,292 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,770-ஆக அதிகரித்துள்ளது. 

நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 13,742 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT