இந்தியா

கொல்கத்தா: கரோனாவிற்கு உதவி துணை ஆய்வாளர் பலி

18th Oct 2020 03:44 PM

ADVERTISEMENT

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கரோனா வைரஸ்தொற்று காரணமாக உதவி துணை ஆய்வாளர் உயிரிழந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மேற்குவங்கத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் தொற்றுக்கு கொல்கத்தாவில் உதவி துணை ஆய்வாளர் சித்தார்தா சேகர் உயிரிழந்தார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவர் உயிரிழந்தார்.

கொல்கத்தாவில் கரோனா தொற்றுக்கு இதுவரை 15 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

கடந்த மாதம் கொல்கத்தா ஆணையர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி துணை ஆய்வாளர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு காவல்துறை துணை நிறுகும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT