இந்தியா

போபால்: மக்களுக்கான வீதி நிகழ்ச்சி; சாலைகளில் மக்கள் நடனம்

18th Oct 2020 11:39 AM

ADVERTISEMENT

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 'மக்களுக்கான வீதி' என்ற நிகழ்ச்சியில் முதியவர்கள் உள்பட ஏராளமான சிறுவர்கள் கலந்துகொண்டு நடனமாடியது பலரைக் கவர்ந்தது.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மக்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் சுற்றுச்சூழலை பேணிப்பாதுகாக்கும் வகையிலும் 'மக்களுக்கான வீதி' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

போபால் ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் தொடங்கப்பட்ட இந்த நிகழச்சி வாரம் தோறும் நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

அந்தவகையில் இந்த வாரம் அதிகாலையிலேயே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் திரண்டு உடற்பயிற்சி செய்யும் வகையில் நடனமாடினர்.

மக்களுக்கான வீதி நிகழ்ச்சியின் கீழ் நடனம், ஓவியம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற பல செயல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஒருசில மாணவர்கள் சாலையில் வண்ண வண்ன ஓவியங்களை வரைந்தனர். காலை 9 மணிவரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதியவர்கள் உள்பட மாணவர்கள், குழந்தைகள் என பலர் கலந்துகொண்டனர்.
 

Tags : Bhopal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT