இந்தியா

கரோனா: குணமடைந்தோர் சதவீதம் 87.88 ஆக உயர்வு 

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 65.24 லட்சம் போ் குணமடைந்தனா். இது, மொத்த பாதிப்பில் 87.88 சதவீதமாகும்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 62,211 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 74,32,680-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 70,815 போ் குணமடைந்தனா். இவா்களுடன் கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 65,24,595-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 87.78 சதவீதமாகும்.

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனாவுக்கு மேலும் 837 போ் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,12,998-ஆக அதிகரித்தது. கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 1.52 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் 7,95,087 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை முதல்முறையாக 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 10.70 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT