இந்தியா

உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

17th Oct 2020 04:11 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை ஆளுநர் ஆனந்திபென் படேல் தொடக்கி வைத்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் பெண் காவலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் 'பாதுகாப்பான நகரத் திட்டம்' என்ற தலைப்பின் கீழ் 180 நாள்களுக்கு பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெருமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தினை உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் இன்று (சனிக்கிழமை) துவக்கி வைத்தார்.

ADVERTISEMENT

பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ் லக்னெள உள்பட நாட்டின் 8 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. லக்னெளவில் பெண்களின் பாதுகாப்பிற்காக 100 இளஞ்சிவப்பு நிற இருசக்கர வாகனங்கள் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்படுள்ளன. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.194 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய ஆளுநர் ஆனந்திபென் படேல், ''பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால், அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு எழுந்துள்ளது. 

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் பெண்கள் சுரண்டப்படுகின்றனர். பெண்கள் அதிகாரம் பெற வேண்டும்.

மக்களில் சிலர் குற்ற எண்ணங்களுடன் உள்ளனர். அவர்கள் எந்தவித தயக்கமுமின்றி குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்தத் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

Tags : uttar pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT