இந்தியா

படேல் சிலையைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

17th Oct 2020 06:40 PM

ADVERTISEMENT

கரோனா தொற்றால் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் சிலை சனிக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் 182 அடி உயரத்தில் சா்தாா் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ‘ஒற்றுமை சிலை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டிருந்தது.

ஒவ்வொரு நாளும் 2,500 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களில் 500 பேர் ஐந்து மணி நேர இடைவெளிகளில் தலா இரண்டு மணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நுழைவுச்சீட்டுகளை இணைய தளத்தில் பெறலாம் எனத் தெரிவித்துள்ள நிர்வாகம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது.

Tags : Gujarat
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT