இந்தியா

பிகார் தேர்தல்: ஒரேநாளில் 2 இடங்களில் ராகுல் பரப்புரை

17th Oct 2020 05:15 PM

ADVERTISEMENT


பிகார் பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அக்டோபர் 23-ம் தேதி 2 பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

பிகார் பேரவைத் தேர்தலில் ராகுல் காந்தி ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்கும் தலா 2 பரப்புரைக் கூட்டங்கள் என மொத்தம் 6 பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிக்கும் வகையில் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் 23-ம் தேதி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் ராகுல் காந்தி, ஒரே நாளில் 2 கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். ஹிசுவா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நீது சிங்கை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதன்பிறகு காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சதானந்த் சிங் மகன் முகேஷ் சிங் போட்டியிடும் கஹல்கான் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், "தேஜஸ்வி யாதவ் மற்றும் ராகுல் காந்தி கூட்டாக பரப்புரை மேற்கொள்ள கட்சி திட்டமிட்டு வருகிறது. ஆனால், இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை" என்றனர்.

ADVERTISEMENT

இதனிடையே, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி இன்று (சனிக்கிழமை) தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது.

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT