இந்தியா

'விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதலே வேளாண் சட்டங்கள்'

17th Oct 2020 04:41 PM

ADVERTISEMENT

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் அனைத்து விவசாயிகளின் ஆன்மா மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நவீன கிராம திட்டத்தின் இரண்டாம் கட்ட விழிப்புணர்வு பிரசாரத்தை காணொலி காட்சி வாயிலாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி துவக்கி வைத்தார்.

பிரச்சாரத்தின் கீழ் சுமார் 50,000 வெவ்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ .2,663 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் துவக்கிவைத்து பேசிய அவர், ''மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல். விவசாயிகளின் ரத்தம் மற்றும் வியர்வை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இத்தகைய தாக்குதல் நாட்டின் அடித்தளத்தை பலவீனப்படுத்துகின்றன'' என்று கூறினார்.

ADVERTISEMENT

''கடந்த சில நாள்களுக்கு டிராக்டர் பேரணிக்காக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவிற்கு சென்ற போது, வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது பெரும்சுமையாக உள்ளதை உணர்ந்தேன். 

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அக்டோபர் 19-ஆம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வேளாண் சட்டங்கள் குறித்து நல்ல முடிவினை எடுப்பார்கள்'' என்று  ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

Tags : rahul gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT