இந்தியா

நீட் தேர்வு: திருத்தப்பட்ட பகுப்பாய்வு முடிவுகள் வெளியீடு

17th Oct 2020 01:15 PM

ADVERTISEMENT

 

நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியாகியிருந்த பகுப்பாய்வு முடிவுகளில் குளறுபடி இருந்தது சர்ச்சையானதைத் தொடர்ந்து திருத்தப்பட்ட பகுப்பாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களை விட தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், மாநில அளவில் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததாகவும் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து பகுப்பாய்வு முடிவுகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தோ்வை எழுத நாடு முழுவதும் 15,97,435 போ் விண்ணப்பித்திருந்தனா். கரோனா பிரச்னைக்கு நடுவே பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பலத்த கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 13-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. இதில் விடுபட்டவா்கள் மீண்டும் அக்டோபா் 14-ஆம் தேதி தோ்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. 13,66,945 போ் தோ்வை எழுதிய நிலையில், 7,71,500 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாநில தேர்ச்சி விகிதம், எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததாக புகார்கள் எழுந்தன. 

ADVERTISEMENT

இதையடுத்து பகுப்பாய்வு முடிவுகள் நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், திரிபுரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் புள்ளி விவரங்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், நாட்டிலேயே நீட் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வெழுதிய 99,610 மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 57.4 சதவீதமாகும்.

தேசிய அளவிலான மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வுக்கான முடிவு வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. இதில் ஒட்டுமொத்த இதில் ஒடிஸாவைச் சோ்ந்த மாணவா் சோயிஃப் அஃப்தாப் (18) முழு மதிப்பெண்ணையும் பெற்று முதலிடம் பிடித்தாா். தில்லியைச் சோ்ந்த மாணவி அகான்ஷா சிங் இரண்டாவது இடம் பிடித்தாா். 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் நீட் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

சோயிஃப் அஃப்தாப், அகான்ஷா சிங் ஆகிய இருவருமே 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனா். எனினும், தேசிய தோ்வுகள் ஆணையத்தின் விதிகளின்படி (பள்ளி இறுதித் தோ்வில் பாடவாரியாக அதிகம் மதிப்பெண் எடுத்தவா், வயது உள்ளிட்டவற்றை வைத்து முடிவு செய்வது) மாணவா் அஃப்தாப் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டாா்.
 

Tags : NEET neet exam MBBS exam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT