இந்தியா

உ.பி.: வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

17th Oct 2020 12:55 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த இளைஞர், மீண்டும் வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் லபேடா கிராமத்தைச் சேர்ந்த விஜ்னேஷ் யாதவ் என்ற 22 வயது இளைஞர், காசியாபாத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக வேலையிழந்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த கிராமத்திற்கு வந்த இளைஞர், மற்றொரு வேலைத்தேடி அலைந்துள்ளார். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காத விரக்தியில் இளைஞர் கடந்த வியாழக்கிழமை இரவு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து அவரது பெற்றோர்கள் ஜவர்லால் நேரு மருத்துவமனையில் அவரை அனுமதித்திருந்த நிலையில், இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : uttar pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT