இந்தியா

சிவராஜ்சிங் சௌஹான் கடந்த ஏழு மாதங்களில் எதுவும் செய்யவில்லை: கமல் நாத்

17th Oct 2020 06:35 PM

ADVERTISEMENT

முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் கடந்த ஏழு மாதங்களில் தேங்காய் உடைத்தல் தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒருவாரத்திற்கு பிறகு நவம்பர் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு தலைநகர் போபலில் இன்று நடைபெற்றது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான கமல் நாத் நிகழ்ச்சியில் பங்கேற்று தேர்தல் இதனை வெளியிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் உள்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது பேசிய கமல் நாத், சிவராஜ்சிங் சௌஹான் கடந்த ஏழு மாதங்களில் தேங்காய் உடைத்தல், தவறான அறிவிப்புகள் மற்றும் அடிக்கல் நாட்டியதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

தேர்தல் வரும்போதெல்லாம், பாகிஸ்தான், சில நேரங்களில் சீனா, மக்கள் கவனத்தை திசை திருப்ப அவர்கள் முன் வருகிறது. அவை மக்கள் கவனத்தை திசை திருப்புகின்றன. ஏனெனில் சிவராஜ் திசை திருப்பும் அரசியல் செய்வதில் திறன் பெற்றவர் என்றார்.

ADVERTISEMENT

Tags : madhya pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT