இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதி சுட்டுக்கொலை

17th Oct 2020 10:52 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு- காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அனந்தநாக் மாவட்டத்தின் லார்னோ பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதியும் பாதுகாப்புப்படையினரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் அவரிடமிருந்து ஏ.கே. -47 ரக துப்பாக்கியையும் வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அப்பகுதிகளில் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : jammu-kashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT