இந்தியா

இத்தாலியில் அதிகரிக்கும் கரோனா: இன்று புதிதாக 10 ஆயிரம் பேருக்குத் தொற்று

17th Oct 2020 12:40 PM

ADVERTISEMENT

 

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,010 பேருக்கு புதிதாக  கரோனா வைரஸ் தொற்று பதிவுவாகியுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 1,07,312 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் மார்ச் மாத இறுதியிலும், ஏப்ரல் மாத துவக்கத்திலும் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. அதன்படி, நேற்று நிலவரப்படி பாதிக்கப்பட்ட 6,178 பேர் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவற்றில் 638 பேர் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

தொற்று பாதிக்கப்பட்ட 1,00,496 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா பாதித்து இதுவரை 2,47,872 பேர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தொற்றுக்கு 36,427 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT