இந்தியா

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு 8 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கரோனா

17th Oct 2020 12:16 PM

ADVERTISEMENT

நாட்டில் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு  8 லட்சத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டிய இடங்கள் கண்டறியப்படுகின்றன.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரை கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலமும் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் கடந்த ஒன்றரை மாதங்களாக கரோனா பாதிப்பு 8 லட்சத்திற்கும் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மொத்த பாதிப்பில் 10.70 சதவிகிதம் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி 7,95,087 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நவம்பர் 1-ஆம் தேதி முதல் 8 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. இதனையடுத்து கரோனா பரவல் 8 லட்சத்திற்கும் அதிகமாகவே இருந்த நிலையில் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும்  8 லட்சத்திற்கும் கீழாகவே கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 70,816 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 65,24,595 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைவோர் விகிதம் 87.78 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடு காரணமாகவும், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் கடும் முயற்சியினால் குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளது. 

உலக அளவில் இந்தியாவில் மட்டுமே அதிக தொற்று பரவல் இருந்தாலும், உயிரிழப்பு விகிதம் குறைவாகவும், குணமடைவோர் விகிதம் அதிகமாகவும் உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT