இந்தியா

“காங்கிரஸ் பாகிஸ்தானைத் தான் பாராட்டும்”: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

17th Oct 2020 04:42 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளைத் தான் பாராட்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, மத்திய அரசால் கரோனா தொற்றுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பொருளாதாரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாஜக அரசை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த பன்னாட்டு நிதியத்தின் ஒப்பீடு வரைபடத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டு இந்தியாவைவிட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட கரோனாவை சிறப்பாகக் கையாண்டுள்ளன’ என்று  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். மேலும்  இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.3% வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளைத் தான் பாராட்டும் என பதிலளித்துள்ளார். ”காங்கிரஸின் ராகுல் காந்தி தனது உரைகளில் பாகிஸ்தானைப் பாராட்டுகிறார். எதுவாக இருந்தாலும், அவர் பாகிஸ்தான் மற்றும் சீனாவைப் பாராட்டவே விரும்புகிறார். இதுதான் காங்கிரஸ் கட்சியின் கண்ணோட்டம்.” என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : Prakash Javadekar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT