இந்தியா

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை  திரும்ப பெற வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்த​ல்

17th Oct 2020 10:45 AM

ADVERTISEMENT


புதுதில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370 -வது அரசியல் சாசன சட்டத்தை நீக்கிய முடிவை, மோடி தலைமாயிலான பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றுகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:  2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மோடி தலைமையிலான பாஜக அரசால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான மற்றும் அரசியலமைப்பற்ற முடிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்துள்ள ப.சிதம்பரம்,  மக்களின் உரிமைகள் மீட்டெடுப்பதற்காக, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியத்தை சார்ந்த பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு போரை முன்னெடுத்து இருப்பது ஒரு வளர்ச்சியாகும்,  இந்திய மக்கள் அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டும். 

மத்திய அரசு எதிர்க்கட்சிகளையும் ஜம்மு காஷ்மீர் மக்களையும் பிரிவினைவாதி அல்லது தேச விரோதமாக பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

மற்றொரு பதிவில், நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிதம்பரம், ஒரிசாவும் தில்லியும் தொலைதூரம் மற்றும் வேறுபட்டவை. ஒடிஸாவைச் சோ்ந்த மாணவா் சோயிஃப் அஃப்தாப் ஒரு பையன், இரண்டாவது இடம் பிடித்த தில்லியைச் சோ்ந்த அகான்ஷா சிங் ஒரு பெண். அவர்களின் கலாச்சார பின்னணிகள் வேறு. இருப்பினும் அவர்கள் சரியான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனா்.

பன்முகத்தன்மையும் பன்மைத்துவமும் தான் இந்தியாவின் அழகும் பலமும் ஆகும். அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்வதே இந்த தலைமுறையின் கடமை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags : Congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT