இந்தியா

“பிரித்தாளும் தந்திரத்திற்கு திரும்பும் காங்கிரஸ்”: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா

17th Oct 2020 06:17 PM

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெறக் கோரிய ப.சிதம்பரத்தின் கருத்தை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் செய்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பதிவில் சட்டப்பிரிவு 370யை ரத்து செய்ததை திரும்பப்பெற வேண்டும் எனக் கோரியிருந்தார். இதற்கு பதிலளித்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “காங்கிரஸுக்கு பேசுவதற்கு நல்ல திட்டங்கள் குறித்த நிரல்  இல்லாததால், அவர்கள் பீகார் தேர்தலுக்கு முன்னர் தங்களின் பிரித்தாளும் இந்தியா எனும் தந்திரத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ராகுல் காந்தி பாகிஸ்தானைப் புகழ்ந்தார். 370 வது சட்டப்பிரிவை திரும்ப வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவது வெட்கக்கேடானது!" என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : JP Nadda
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT