இந்தியா

இந்தியா-இங்கிலாந்து இடையே கூடுதல் விமான சேவையை அறிவித்தது ஏர் இந்தியா

17th Oct 2020 07:30 PM

ADVERTISEMENT

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே கூடுதல் விமான சேவைகளை தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மார்ச் 23 முதல் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும் இங்கிலாந்து உட்பட சுமார் 17 நாடுகளுடன் இந்தியா உருவாக்கிய இருதரப்பு விமான ஒப்பந்தங்களின் கீழ் ஜூலை முதல் சிறப்பு சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான இருதரப்பு விமான ஒப்பந்தங்களின்படி கூடுதல் விமான சேவைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, அமிர்தசரஸ், கொல்கத்தா, கொச்சி மற்றும் கோவா ஆகிய நகரங்களிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இரு நாடுகளுக்கிடையே கூடுதல் விமான சேவைகள் வழங்கப்பட உள்ளன.

2021 ஜனவரி 1 முதல் மார்ச் 27 வரை திட்டமிடப்பட்ட விமானத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை விமானத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், அழைப்பு மையங்கள் அல்லது முன்பதிவு அலுவலகங்கள் அல்லது முகவர்கள் வழியாக பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், 17,11,128 பேர் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளனர். 2,97,536 பேர் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செய்துள்ளனர். என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Tags : Air india
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT