இந்தியா

உ.பி.: சாலை விபத்தில் 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்

17th Oct 2020 12:38 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் ஜீப் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெளவிலிருந்து பிலிபிட் மாவட்டத்தை நோக்கிப் பயணிகளுடன் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து புரன்பூர் பகுதியருகே வரும்போது எதிரே வந்த ஜீப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து மற்றும் ஜீப்பில் பயணித்த 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் இருந்த மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து பேசிய பிலிபட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயப்பிரகாஷ் யாதவ், ''சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது'' என்று கூறினார். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : uttar pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT