இந்தியா

காபூலில் 10 நாள்களில் குற்றம் தொடர்பான சம்பவங்களில் 14 பேர் பலி

17th Oct 2020 02:59 PM

ADVERTISEMENT

 

கடந்த 10 நாள்களில் காபூலில் நடந்த குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட டோலோ நியூஸ் கணக்கெடுப்பில் பலியான 14 பேரில் ஐந்து பேர் ராணுவ வீரர்கள் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 10 நாள்களில் ஆப்கன் தலைநகரில் 20 குற்றம் தொடர்பான சம்பவங்களும், 3 வெடிகுண்டு தாக்குதலும் நடந்துள்ளன. 

ADVERTISEMENT

காபூல் மற்றும் நாட்டின் பிற பெரிய நகரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்புப் பணியாளர்களை ஒருங்கிணைப்பதற்கான பாதுகாப்புத் திட்டம், பாதுகாப்பு சாசனம் ஆகியவற்றை அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆப்கானித்ன் பிரதமர் அஷ்ரப் காணி, நகரத்தில் நடைபெறும் குற்ற வழக்குகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காபூலில் வெவ்வேறு குற்றங்கள் தொடர்பாகக் கடந்த 10 நாள்களில் 500 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT