இந்தியா

மகாராஷ்டிரத்தில் கனமழை வெள்ளம்: மீட்புப் படையினர் குவிப்பு

15th Oct 2020 11:24 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மீட்புப் படையை சேர்ந்த இரண்டு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் மழை பெய்த நிலையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

புறநகர் பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால்,     நெற்பயிற்கள், வாழை, பப்பாளி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. 

சாவித்ரிபாய் புணே பல்கலைக்கழகம் இணையவழித் தேர்வை ஒத்திவைத்துள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மத்திய மகாராஷ்டிரம், மும்பை, தாணே உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த இரண்டு குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அடுத்த 12 மணிநேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tags : Maharashtra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT