இந்தியா

சோபியான் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

14th Oct 2020 03:57 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சோபியான் மாவட்டதில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சகுரா பகுதியில் புதன்கிழமை பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதால், தேடும் பணியில் பாதுகாப்பபுப்படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT