இந்தியா

'தில்லி மாசுபாட்டிற்கு அனல்மின் நிலையங்களே முக்கியக் காரணம்'

14th Oct 2020 06:47 PM

ADVERTISEMENT

தில்லியில் ஏற்படும் காற்று மாசுபாட்டில் அனல் மின் நிலையங்களே மிகமுக்கியக் காரணம் என்று மின்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தில்லியில் அதிக அளவில் காற்று மாசு ஏற்பட்டு வருவதாகவும், இதில் அனல்மின் நிலையங்களால் அதிக அளவு மாசு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனால் அடுத்த சில ஆண்டுகளில் தில்லியில் அனல்மின் நிலையங்கள் அனைத்தும் மூடப்படும். ஏற்கனவே 3 அனல்மின் நிலையங்களை தில்லி அரசு முடக்கியுள்ளது. பிறகு அனல் மின் நிலையங்கள் இல்லாத ஒரே மாநிலமாக தில்லி இருக்கும் என்றும் கூறினார். 

காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தில்லியில் உள்ள 11 அனல் மின் நிலையங்களை முடக்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Satyendar Jain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT