இந்தியா

தெலங்கானாவில் கனமழை: இன்றும், நாளையும் விடுமுறை அறிவிப்பு

14th Oct 2020 12:49 PM

ADVERTISEMENT

தெலங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்றும், நாளையும் அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் கடந்த 2 நாள்களாக தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் சூழந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாறைகள் சரிவு, சுவர் இடிந்து விழுந்து விபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 12 பேர் உயிரிழ்ந்த நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே ஆந்திரத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை காக்கிநாடா நோக்கி நகர உள்ளதால், அடுத்த 24 மணிநேரத்திற்கு ஆந்திரம் மற்றும் தெலங்கானா கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனால் இன்றும், நாளையும் தெலங்கானாவில் தனியார் நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு விடுமுறை அளித்துள்ளது. மேலும் வீட்டில் இருந்தபடி பணிபுரியவும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Telangana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT