இந்தியா

தெலங்கானா முதல்வர், ஆளுநரிடம் வெள்ள பாதிப்புகளைக் கேட்டறிந்த குடியரசுத் தலைவர்

14th Oct 2020 08:13 PM

ADVERTISEMENT

தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சேதமடைந்த பகுதிகளில் காவல்துறையினருடன் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் தொடர்கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா மக்களுடன் நாடு உடன் நிற்பதாக அவர் தெரிவித்தார்.

Tags : telangana flood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT