இந்தியா

விளம்பர விவகாரம்: மன்னிப்புக் கோரியது தனிஷ்க் நகைக் கடை

14th Oct 2020 04:33 PM

ADVERTISEMENT


குஜராத்தின் கட்ச் மாவட்டம் காந்திதாம் நகரிலுள்ள தனிஷ்க் நகைக் கடை, தனிஷ்க் விளம்பரத்துக்காக ஹிந்துக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

நகைக் கடை வாயிற்கதவில் மன்னிப்புக் குறிப்பை ஒட்டியுள்ளனர்.

அந்தக் குறிப்பில், "தனிஷ்க்கின் வெட்கத்துக்குரிய விளம்பரத்துக்காக கட்ச் மாவட்ட ஹிந்து சமூக மக்களிடம் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பு அக்டோபர் 12-ம் தேதி ஒட்டப்பட்டதாகவும், அதன்பிறகு எடுக்கப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்தது.

நகைக் கடையின் இந்த மன்னிப்புக் குறிப்பு சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது.

ADVERTISEMENT

அதேசமயம், விளம்பரத்தைக் கண்டு கோபத்தில் சிலர் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை உள்ளூர் காவல் துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட கடை மேலாளர் ஆகியோர் மறுத்துள்ளனர். கட்ச் கிழக்கு காவல் கண்காணிப்பாளர் மயூர் பாட்டில், "இதுபோன்ற தாக்குதல் சம்பவம் ஏதும் அரங்கேறவில்லை." என்றார்.

ஹிந்து மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு முஸ்லிம் குடும்பத்தினர் தயாராகி வருவதுபோல் விளம்பரப் படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

Tags : Gujarat
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT