இந்தியா

காங்கிரஸில் இணைந்த சரத் யாதவின் மகள்

14th Oct 2020 03:33 PM

ADVERTISEMENT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசியத் தலைவரான சரத் யாதவின் மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பிகாரில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசியத் தலைவரான சரத் யாதவின் மகள் சுபாஷினி யாதவ் உள்ளூர் தலைவர்களின் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

மேலும் லோக் ஜனசக்தியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காளி பாண்டேவும் காங்கிரஸ்  கட்சியில் இணைந்தார்.

ADVERTISEMENT

பிகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாகவும், அவர்களுக்கு தொகுதியில் போட்டியிடும் வகையில் இடம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய சுபாஷினி யாதவ், பிகார் தேர்தலில் காங்கிரஸ் மகா கூட்டணியில் இருந்து போராடுவேன். இதற்கு எனது தந்தையும் ஆதரவு தெரிவித்துள்ளார். 

எனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் எனது தந்தையால் தேர்தலில் இயங்க முடியவில்லை.  பிகாரை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வதற்காக தேர்தலில் போரிடுவது எனது பொறுப்பு என்று தெரிவித்தார்.

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT