இந்தியா

அக்.16 முதல் 5 நாள்களுக்கு சபரிமலை கோவில் நடைதிறப்பு: தேவசம்போர்டு

14th Oct 2020 07:35 PM

ADVERTISEMENT

பூஜைக்காக அக்டோபர் 16ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு கேரள சபரிமலை கோவில் திறக்கப்பட உள்ளதாக தேவசம்போர்டு புதன்கிழமை அறிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கேரளத்தில் உள்ள சபரிமலை கோவில் மூடப்பட்டிருந்தது. பொதுமுடக்க தளர்வு காலத்தில் ஜூன் மாதம் கோவில் திறக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அது கைவிடப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 16 முதல் 5 நாட்களுக்கு பூஜைகளுக்கு சபரிமலை கோயில் திறக்கப்படுவதாவும் நாளொன்றுக்கு 250 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இணையம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் 48 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட கரோனா எதிர்மறை சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Tags : Sabarimala temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT