இந்தியா

கர்நாடகத்தில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை

14th Oct 2020 02:51 PM

ADVERTISEMENT

பலத்த மழையைத் தொடர்ந்து கர்நாடகத்தின் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

அதனையொட்டி பாகல்கோட், கடாக், ஹவேரி, விஜயபுரா, தர்வாட், பெலகாவி, ரைச்சூர், கலாபுராகி மற்றும் யாத்கீர் ஆகிய மாவட்டங்களுக்கு புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களுக்கு 'சிவப்பு நிற எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT