இந்தியா

ஃபிளிப்கார்ட், பதஞ்சலி நிறுவனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்

14th Oct 2020 03:16 AM

ADVERTISEMENT

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் (சிபிசிபி) பதிவு செய்யப்படாத ஃபிளிப்கார்ட், பதஞ்சலி நிறுவனங்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஃபிளிப்கார்ட், பதஞ்சலி நிறுவனங்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை. அது தொடர்பாக அவர்கள் உரிய பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை. எனவே, அவற்றின் செயல்பாடுகளை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது எனக் காரணம் கேட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த 8}ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் கோக கோலா பெவரேஜஸ், பெப்சிகோ இந்தியா ஹோல்டிங், பிஸ்லேரி இன்டர்நேஷனல், நரிஷ்கோ பெவரேஜஸ் ஆகிய நிறுவனங்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆதார அடிப்படையிலான மதிப்பீடு குறித்த தகவல்களை அவர்கள் வழங்கவில்லை. அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, அந்த நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அமேசான் செல்லர் சர்வீஸ், கோக கோலா இந்தியா, பார்லே அக்ரோ, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஆகியவை பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் பிராண்ட் உரிமையாளர் மற்றும் தயாரிப்பாளராக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் காலாண்டு நிலவர அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பதிவு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் சுற்றுச்சூழல் தணிக்கை குறித்த தீர்ப்பாயத்தின் உத்தரவு தொடர்பாக, நிபுணர் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT