இந்தியா

மகாராஷ்டிரத்தில் அக்.15 முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

14th Oct 2020 05:42 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று மத்தியில் மகாராஷ்டிரத்தில் அக்டோபர் 15 முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி உள்ளிட்ட பொதுமுடக்கத் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.

நாடு முழுவதுமான கரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் அவ்வப்போது தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் பொதுமுடக்க நடவடிக்கைகளில் தளர்வுகளை அறிவித்திருந்தார். அதன்படி அக்டோபர் 15 முதல் மெட்ரோ ரயில் சேவை செயல்பட உள்ளது. மேலும் நூலகங்கள், கடைகள் மற்றும் சந்தைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். வணிகக்கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மத வழிபாட்டுக் கூடங்கள் திறக்க தடை நீடிக்கிறது. 

தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்பட மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

திரையரங்குகள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை தொடர்கிறது. மகாராஷ்டிரத்தில் மத வழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மற்றும் முதல்வர் உத்தவ் தாக்கரே இடையே மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags : Maharastra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT