இந்தியா

நாட்டில் இதுவரை 9 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர் 

14th Oct 2020 11:30 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி:  நாட்டில் இதுவரை 9 கோடியே 90 ஆயிரத்து 122 கரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72 லட்சத்து 39 ஆயிரத்து 390ஆக  உயர்ந்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 63,509 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் மட்டும் 11,45,015 லட்சம் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 9,00,90,122 ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களை மீட்பதில் அதிவேக வளர்ச்சியைக் கண்டு வருகிறது. மே மாதத்தில் 50,000 இருந்த மீட்பு எண்ணிக்கை அக்டோபர் 13 ஆம் தேதி வரை 63,01,928 -ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை இதுவரை 63,01,928 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 74,632 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 87.05 சதவீதமாகும்.

உலகில் தொற்று வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவோர், புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மற்றும் தினசரி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. உயிரிழப்பு 1.53 சதவீதமாக ஆக குறைந்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT